உத்தரப் பிரதேச மாநிலம் படாவ்ன் பகுதியில் 22 மாடுகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளன. இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மாடுகளை பரிசோதித்து பார்க்கையில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து மாட்டின் உரிமையாளர் அருகிலிருக்கும் கஷ்கஞ்ச் மாவட்டத்தில்தான் தீவனம் வாங்கியதாக கூறியுள்ளார். பின்னர், தலைமை கால்நடை அலுவலர் டாக்டர். ஏ.கே. ஜடாவுன், கஞ்சலா, உஜ்ஹானி மற்றும் படாவ்ன் பகுதியில் இருக்கும் கால்நடை மருத்துவர்கள் குழு உயிரிழந்த மாடுகளை மறுபரிசோதனை செய்ய வந்தனர். உயிரிழந்த மாடுகளை சோதித்ததில், அதிக நைட்ரஜன் நிறைந்த பச்சை தீவனத்தை உட்கொண்டதால்தான் மாடுகள் உயிரிழந்துள்ளன என்று மருத்துவர்கள் குழு கூறியது மாட்டின் உரிமையாளரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி