தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாதைச் சேர்ந்த தம்பதியினர், பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையை விற்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தங்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் குழந்தையை விற்றதாக தெரிவித்தனர். குழந்தையை வாங்கியவர் அவரது உறவினர் என்றும் பத்திரத்தில் கையெழுத்திட்டு குழந்தையை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து குழந்தையின் தாய் கூறுகையில், “எனது கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையானவர். எங்களிடம் பணம் இல்லை. இதனால், எங்களுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை விற்றுவிட்டோம்” என்றார்.
இதையடுத்து, குழந்தையைக் கைப்பற்றிய காவல் துறையினர், குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை வாங்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்ட நபர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் துறை வாகனத்தில் பிறந்த குழந்தை: தாயும்-சேயும் நலம்!