ETV Bharat / bharat

கரோனாவுக்கு மருந்தா? - விளம்பரத்தை உடனே நிறுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ஆயுஷ் உத்தரவு! - ஆயுர்வேதம்

டெல்லி: பதஞ்சலியின் மருந்துங்கள் ஏழு நாள்களில் கோவிட்-19 நோயாளிகளை குணப்படுத்தும் என்ற விளம்பரத்தை உடனடியாக நிறுத்த ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனாவை குணப்படுத்துகிறதா பதஞ்சலியின் மருந்து ?

author img

By

Published : Jun 23, 2020, 10:14 PM IST

Updated : Jun 24, 2020, 8:54 AM IST

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்றுக்கான மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே தொடர்ந்து நீடித்துவருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்' ஒன்றை ஜூன் 23ஆம் தேதி வெளியிட்டு, அதன்மூலம் கோவிட் -19 நோயாளியை ஏழு நாள்களில் 100 விழுக்காடு உத்தரவாதத்துடன் குணப்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.

இது குறித்து பதஞ்சலியின் நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், "கரோனில் மற்றும் ஸ்வாசரி (Coronil & Swasari) என்ற எங்களது ஆயுர்வேத மருந்தானது, பதஞ்சலி ஆராய்ச்சி மையம்-ஜெய்ப்பூரின் நிம்ஸ் (NIMS) பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்கு கொடுத்தோம். அனைவரும், 100 விழுக்காடு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள்” எனத் தெரிவித்திருந்தது.

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இவ்வாறு விளம்படுத்திய சில மணி நேரங்களில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த விளம்பரத்தைத் தடைசெய்ய உத்தரவிட்டது.

மேலும், அந்நிறுவனத்தின் மருந்து குறித்து முறையாக ஆராயப்பட்டு, முடிவு வெளியாகும் வரை இந்த விளம்பரத்தை மேற்கொள்ள கூடாதென அறிவுறுத்தியுள்ளது.

பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்தின் கலவை, ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ நெறிமுறை, மத்திய மருந்தாய்வு நிறுவன கட்டுப்பாட்டு குழுவின் அனுமதி, அங்கீகாரத்திற்கான பதிவு, சி.டி.ஆர்.ஐ. பதிவு போன்ற விவரங்களை விரைவாக சமர்ப்பிக்குமாறு மத்திய ஆயுஷ் அமைக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆயுர்வேத மருந்துகளின் உரிமம், தயாரிப்பு ஒப்புதல் விவரங்களை வழங்குமாறு உத்தரகாண்ட் அரசின் சம்பந்தப்பட்ட மாநில உரிமம் ஆணையத்திடம் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மரபு மருத்துவங்கள் கரோனவை குணப்படுத்துகிறது எனச் சொல்லப்படுவது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, "சில மேற்கத்திய, பாரம்பரிய மற்றும் வீட்டு மருந்துகள் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை போக்கவும் உதவி செய்யும்.

அதே நேரத்தில் இந்த மருந்துகள் கரோனா தொற்றை முற்றிலும் குணப்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆய்வுகளோ, ஆதாரங்களோ இல்லை. எனவே, இதைப் போன்ற மருந்துகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்யாது" என விளக்கம் கொடுத்திருந்தது.

Last Updated : Jun 24, 2020, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.