ETV Bharat / bharat

ஹத்ராஸ் பாலியல் வழக்கு: நீதி கிடைக்கும்வரை செருப்பு அணிய மாட்டேன்! - ம.பியில் ஆட்டோ ஓட்டுநர் செருப்பு அணிய மாட்டேன் என உறுதிமொழி

போபால்: ஹத்ராஸில் பெண்ணைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உறுதிமொழி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

aut
utaut
author img

By

Published : Oct 5, 2020, 1:02 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் ஹிசாரில் உள்ள ஆரியநகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பால் பர்மா, ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் ஹத்ராஸில் பெண்ணைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படும்வரை செருப்பு அணிய மாட்டேன் என உறுதிமொழியை எடுத்துள்ளதாக ஆட்டோவில் பதாகை ஒன்றை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்னதாக, நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட்ட நாளில் தனது ​​இவர் தனது ஆட்டோவில் மக்களுக்கு இலவச சவாரி வழங்கினார். இது தவிர, பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு ரக்ஷா பந்தனில் இலவச சவாரிகளையும் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் பெண்கள் பிறந்த நாளிலிருந்து சித்திரவதை மற்றும் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.பெரும்பாலான பெண்களுக்கு குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.