நீண்ட காலமாக இந்தியா, சீனா இடையே லடாக்கில் எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளுக்கு மோதல் ஏற்பட்டு, இரு தரப்பு வீரர்களுக்கும் காயமடைவர். கடந்த வாரமும் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்து இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். பின்னர் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், நேற்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் இருநாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்களாவது மரணமடைந்திருக்கலாம் என அரசுத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சீனா ராணுவ வீரர்கள் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் வீரமரணமடைந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க: இந்திய - சீன மோதல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!