உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், மக்களிடையே ஒரு துண்டு பிரசுரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த துண்டு பிரசுரத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி, குணமாக்கும் மந்திரம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மந்திரம் பற்றி அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் என ஜோதிடர் ஒருவரின் பெயர் முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் சஞ்சய் திவாரி என்பதும், அப்பகுதியில் தன்னை பெரிய ஜோதிடராக காட்டிக் கொண்டு திரிபவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் (குற்றம்) மோஹித் யாதவ் கூறுகையில், “திவாரி மீது சட்ட ஒழுங்கை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.