ETV Bharat / bharat

வாடகைத்தாய் மீது வன்முறைக் கும்பல் வெறியாட்டம் - குற்றவாளிகளைத் தேடும் காவல் துறை

author img

By

Published : Mar 16, 2020, 1:13 PM IST

Updated : Mar 16, 2020, 1:22 PM IST

பெங்களூரு: கருவுற்றிருந்த வாடகைத்தாய் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், அப்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

Assault on pregnant woman which resulted with abortion

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மைகோ லே-அவுட்டில் 27 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைத் தாயாக இருந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உதவி வந்திருக்கிறார்.

இந்நிலையில் அப்பெண் மீது சில சமூக விரோதிகள் பணம் கேட்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பெண் மீது தாக்குதல் நடத்தி தப்பிய பூஜா, மஞ்சுநாத், பிரேமா, ஆஷா, ரீட்டா, பிரமிளா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான பெண், ஒரு தனியார் கருவுறும் மையத்திற்கு வாடகைத் தாயாக சேவை புரிந்து வந்திருக்கிறார். தாக்குதலுக்குள்ளானபோது, அப்பெண், மாதூரிமணக், தீபஞ்சங் தம்பதிகளின் 4 மாத கருவை வயிற்றில் சுமந்திருக்கிறார். இதனிடையே மருத்துவர்களின் தொடர்கண்காணிப்பில் இருப்பதற்காக, கருவுறும் மையத்திற்கு அருகிலேயே ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்திருக்கிறார்.

இதை நோட்டமிட்ட பூஜா, மஞ்சுநாத், பிரேமா, ஆஷா, ரீட்டா, பிரமிளா ஆகியோர் வாடகைத்தாயாக இருக்கும் பெண்ணின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு அங்கு சென்றிருக்கின்றனர். பின், தாங்கள் நடத்தும் பெண்கள் அமைப்பிற்கு, வாடகைத் தாயாக இருந்து சம்பாதிக்கும் பெரும்பாலான பணத்தை தரவேண்டுமென்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவிக்கவே, மிரட்டியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11ஆம் தேதி, காலை 10 மணிக்கு மீண்டும் அப்பெண்ணின் இருப்பிடத்துக்கு வந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், வாடகைத் தாயாக இருக்கும் அப்பெண்ணை அடித்து உதைத்து தள்ளினர்.

கருச்சிதைவுக்கு ஆளான வாடகைத் தாய் : சமூக விரோதிகளுக்கு போலீஸ் வலை

மேலும் இதைத் தடுக்க வந்த விடுதிக்காப்பாளரும் ஒரு பெண்ணும் தாக்கப்பட்டனர். அத்தருணத்தில் கீழே விழுந்த அப்பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அப்பெண்ணின் கருச்சிதைவுற்றிருந்தது உறுதிபடுத்தப்பட்டது.

இதையும் படிங்க:

பொதுமக்களே உஷார்..போலி கால் சென்டர் சலுகைய நம்பி ஏமாறாதீங்கோ!

Last Updated : Mar 16, 2020, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.