சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் கண்டறிந்து கரோனா பரிசோதனை நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்ற ஏரளாமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாநில அரசுகள் கடும் அச்சத்தில் உள்ளன. மேலும், பங்கேற்ற மக்கள் தானாக முன்வர வேண்டும் எனவும் அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதனிடையே, அசாம் காவல் துறையினர் அவசர அறிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
அதில், "டெல்லி மாநாட்டில் பங்கேற்ற நபர்களும், சமீபத்தில் கரோனா பாதித்த நாடுகளுக்கு பயணம் செய்த மக்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நாளை காலை 6 மணிவரை காவல் துறையினர் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அரசை ஏமாற்ற நினைப்போர் மீது சட்டப்படி தண்டனை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகளவில் 75 ஆயிரத்தை நெருங்கும் கோவிட்-19 உயிரிழப்பு!