ETV Bharat / bharat

1 கிலோ டீத்தூள் 70 ஆயிரம் ரூபாய்...! தொடர்ந்து சாதனை படைக்கும் கவுஹாத்தி ஏலச்சந்தை

அஸ்ஸாம்: கவுஹாத்தி ஏலச்சந்தையில் ஒரு கிலோ ’மனோகரி கோல்டு டீ’ ரூ 50,000-க்கும், ஒரு கிலோ ’ஸ்பெஷல் டீ’ ரூ 70,501க்கும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. உலகின் தேயிலைச் சந்தையில் இது ஒரு மைல்கல்.

அஸ்ஸாம் டீத்தூள்
author img

By

Published : Aug 1, 2019, 10:44 AM IST

புத்துணர்வு பானம் என்றாலே இந்தியர்களுக்கு டீ தான். மலிவு விலையில் கிடைப்பதால் காலை எழுந்தவுடன் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரும் சுறுசுறுப்பாக்க டீ குடித்து விடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

இதில், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் நாட்டில் தேயிலை உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி ஏலச்சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு, தேயிலைத்தூளை விலை கொடுத்து வாங்கும் நிலையும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 2018ஆம் ஆண்டு ’மனோகரி கோல்டு’ என்ற தேயிலைத் தூள் ஒரு கிலோ 39,001 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டு அனைவரையும் மலைப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ ‘மனோகரி கோல்டு’ டீத்தூள் 50,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதேபோல், ’டிப்ரூகார் மைஜான்’ என்ற டீ எஸ்டேட்டில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக டீத்தூள் 70,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேயிலை ஏல மையத்தின் செயலாளர் தினேஷ் பிஹானி கூறும்போது, ‘பொது ஏலத்தில் ஒரு கிலோ மனோகரி கோல்டு டீத்தூள் 50,000 ரூபாய்க்கு வாங்கப்படுவது இதுவே முதன்முறை. ஸ்பெஷல் டீத்தூள் 70,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

மேலும், உலகிலேயே ரூ 2,605க்கு ஏலத் தொகை ஆரம்பிக்கப்பட்டு ரூ 70,000 விற்கப்பட்ட ஸ்பெஷல் டீத்தூள் இதுவாகத்தான் இருக்கும்’ என மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.