ETV Bharat / bharat

ஊரடங்கு: பத்திரிகையாளர்களிடம் ஆலோசித்த அஸ்ஸாம் முதலமைச்சர் - தேசியச் செய்திகள்

திஸ்பூர்: கரோனா ஊரடங்கு குறித்து தங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களிடம் அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பாநந்தா சோனாவால் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

lockdown
lockdown
author img

By

Published : May 4, 2020, 7:06 PM IST

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பாநந்தா சோனாவால், 47 ஊடகங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள், தலைமை ஆசிரியர்களிடம் காணொலி மூலம் கரோனா ஊரடங்கு நிலவரம் குறித்து கலந்து ஆலோசித்தார்.

கூட்டத்தில், அண்டை மாநில எல்லையை ஒட்டியுள்ள கிராமச் சாலைகளை மூடுவது, காவல் துறையினரைப் பரிசோதிப்பது, பருவ மழைக்காலங்களில் வெள்ளம் வந்தால் பள்ளிகளை நிவாரண முகாம்களாக மாற்ற வேண்டுமா... வேண்டாமா? எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் ஆலோசனைகளை முதலமைச்சர் கேட்டு அறிந்தார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்ததற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் சோனோவால், மக்கள் எவ்வழி நடக்க வேண்டும் என்பதை ஊடகங்களே தீர்மானிப்பதாகக் கூறினார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.