ETV Bharat / bharat

ஆசிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் : முதல் 100 இடங்களுக்குள் எட்டு இந்திய கல்வி நிறுவனங்கள்!

author img

By

Published : Jun 10, 2020, 2:42 PM IST

டெல்லி : ஆசிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டிற்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

asian-university-rankings-2020-8-indian-institutes-among-the-top-100-indian-institutes

பிரிட்டிஷ் தரவரிசை நிறுவனமான ’டைம்ஸ் உயர் கல்வி’ (Times Higher Education)ஆல் பட்டியலிடப்பட்ட, ஆசியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில், எட்டு இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆசிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் டெல்லி, கரக்பூர், ரோப்பர், இந்தூர், கான்பூர், ரூர்க்கி ஆகிய ஆறு இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் (ஐ.ஐ.டி), பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி), வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய எட்டு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு, டெல்லி, கரக்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் (ஐஐடி) கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக அளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. ஐஐடி டெல்லி 67ஆவது இடத்திற்கும், ஐஐடி கரக்பூர் 59ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி) இந்தத் தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆயினும் ஆசிய தரவரிசையின் முதல் 100 இடத்தில் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐஐடி ரோப்பர் 47ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டின் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இது இயம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி இந்தூர் 55ஆவது இடத்தை பிடித்தது. இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி முதன்முறையாக 97ஆவது இடத்துடன் பட்டியலில் இணைந்துள்ளது.

“பிராந்திய ரீதியாகவும் உலக அளவிலும் இந்தியாவின் உயர்கல்வி முறை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், இந்த ஆண்டில் இந்தியாவிற்கு சாதகமான முன்னேற்றங்கள் நாட்டின் சில தொன்மையான நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளன. இது இந்தியாவின் போட்டியிடும் திறனை வெளிப்படுத்துகிறது " என THEஇன் தலைமைச் செயல் அலுவலர் பில் பாட்டி இது குறித்து தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது ஐஐடி நிறுவனங்கள், கற்பித்தல், ஆராய்ச்சி, தொழில்துறை அளவீடுகளின் அடிப்படையில் மேம்பட்டு வருவதாக ஆசிய தரவரிசை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், ஐஐடிக்களின் மதிப்பெண் முறை குறித்து விமர்சித்தும் உள்ளது.

உலகமயமாக்கலுக்கு ஏற்றார் போல், ஐஐடி மாறாமல் உள்ளதாகவும், மும்பை, சென்னை ஐஐடிக்கள் மட்டுமே இதில் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 'கரோனாவால் 120 கோடி மாணவர்கள் கல்வி கற்பதில் நெருக்கடி' - எச்சரிக்கும் யுனிசெஃப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.