இந்தியாவில் வாகனங்கள் தயாரிக்கும் முன்னோடி நிறுவனமான அசோக் லேலண்ட் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சென்னை கிளை ஊழியர்கள் போனஸ் வழங்ககோரி இரண்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊழியர்கள் பேசுகையில் "தொழிலாளர் சங்கம் சார்பில், 10சதவீதம் போனஸ் வலியுறுத்தப்பட்டது, ஆனால் நிறுவனம் ஐந்து சதவீதம் மட்டுமே தருவதாக தெரிவித்தது ஏற்றுகொள்ள முடியாததாகும். இதை தொடர்ந்து நிறுவன அலுவலர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
ஊழியர்களின் கோரிக்கையை நிறுவனம் ஏற்காத பட்சத்தில், போராட்டத்தை உண்ணாவிரதம் போராட்டமாக அடுத்த கட்டுத்திற்கு முன்னெடுத்து செல்வோம்’ என தெரிவித்தனர்.