இதுகுறித்து அவர் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனியாக இயங்குவதை விட பாஜக கட்சியுடன் சேர்ந்து புதிய கட்சி ஆரம்பிக்கலாம் எனக் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாஜக ஆட்சியில் அரசியலமைப்பைத் தாண்டிய அதிகாரம் உண்டு என விமர்சித்த அவர், காந்தி கொலை வழக்குக்கு பிறகு கலாசார அமைப்பாக செயல்பட ஒத்துக்கொண்டதால்தான் சர்தார் வல்லபபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீது உள்ள தடையை நீக்கினார் எனக் கூறினார்.
பட்டேலுக்கு கொடுத்த வாக்கை ஆர்.எஸ்.எஸ். மீறக் கூடாது எனவும், பாஜக ஆட்சியில் அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உத்தரவு தேவை எனவும் கெலாட் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்துப் பேசியது அந்தமைப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கெலாட்டின் கருத்து அவர்களுக்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.