ETV Bharat / bharat

அல்லா பெயர் சொன்ன ஓவைசி; பாஜகவால் பஜனை மடமான நாடாளுமன்றம் - அசாதுதின் ஒவைசி

மக்களவையில் பதவியேற்கவந்த ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, உறுதிமொழியின் இறுதியில் அல்லா பெயர் சொன்னது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

asaduddin owaisi
author img

By

Published : Jun 20, 2019, 1:27 PM IST

அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, 17ஆவது மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மக்களவைக் கூட்டத் தொடரில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஓவைசி, ‘அல்லா’ பெயர் சொல்லியது பேசு பொருளாகியுள்ளது.

பதவியேற்பு விழாவில் அசாதுதீன் ஓவைசியின் பெயரை அரசு செயலர் வாசித்ததும் பாஜகவினர் அனைவரும், ‘பாரத் மாதா கீ ஜே’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சத்தமாக கோஷமிட்டார்கள். 'இன்னும் சத்தமாக கத்துங்கள்' என அசாதுதீன் ஓவைசி கையை உயர்த்தியபடி அதை கண்டுகொள்ளாமல் சென்றார். ஆனால் அவர் பதவிப் பிரமாண உறுதிமொழியை வாசிக்க முடியாதபடி பாஜகவினர் மேலும் சத்தம் எழுப்பினார்கள்.

asaduddin owaisi
பாஜவினர் கோஷத்துக்கு மத்தியில் ஓவைசி

இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் ஓவைசியை தனிமைப்படுத்துவது போல் அமைந்தது. இங்கு யாரும் யாருடைய மதத்துக்கும் எதிரி கிடையாது, மதத்தின் பெயரால் சக மனிதனை ஒடுக்குவதற்கு எதிராகதான் சமூக செயற்பாட்டாளர்களும், மனிதம் பேசும் இயக்கங்களும் போராடி வருகின்றன.

பாஜக எம்.பி.க்கள் பதவியேற்க வரும்போது யாரும் அல்லா பெயர் சொல்லி சத்தமிடவில்லை. ஆனால் பாஜகவினர் தங்கள் சித்தாந்தத்தை ஏற்காதவர்கள் பதவியேற்றால், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதிக்கும் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டதை கவனிக்க முடிந்தது. தனிமைப்படுத்தப்பட்ட அசாதுதீன் ஓவைசி, ‘அல்லா’ பெயரை உச்சரிக்கும் முன் ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டது கவனிக்கப்பட வேண்டியது. அல்லா பெயரைச் சொல்லும் சூழலுக்கு அசாதுதீன் ஓவைசியை தள்ளியது பாஜக என்பது ஆழ்ந்த அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

பாஜகவால் நாடாளுமன்றம் பஜனை மடமானது. இனிவரும் காலங்களில் பாஜக போன்ற வெறுப்புணர்வை விதைக்கும் கூட்டத்துக்கு மத்தியில் போராடிதான் மக்களுக்கான உரிமையைப் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். சாதி, மதம் கடந்து மனிதம் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நேரமிது என வேதனை தெரிவிக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.