ETV Bharat / bharat

பதவியேற்றபோது முழக்கமிட்டவர்களுக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி! - நாடாளுமன்றம்

டெல்லி: அசாதுதீன் ஓவைசி பதவி ஏற்க வந்தபோது, முழக்கமிட்டவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தையும், முசாபர்பூரில் குழந்தைகள் இறப்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Asaduddin Owaisi
author img

By

Published : Jun 18, 2019, 3:48 PM IST

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று டெல்லியில் தொடங்கியது. முதலில் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து தெலங்கானா எம்.பி.க்களும் ஒவ்வொருவராக பதவி ஏற்றனர். அப்போது ஆல் இந்தியா மஜ்லிஸ்-ஈ-இட்டஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதவி ஏற்க வந்தபோது, 'வந்தே மாதரம்', 'ஜெய் ஸ்ரீராம்' என பாஜக தரப்பினர் முழக்கமிட்டனர்.

அசாதுதீன் ஓவைசி பதவியேற்பு

அந்த முழக்கங்களுக்கு இடையில் அவர் எம்.பி.ஆக பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், இங்குள்ளவர்கள் என்னைப் பார்க்கும்போது, சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், முசாபர்பூரில் குழந்தைகள் இறப்பதையும் இங்குள்ளவர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அசாதுதீன் ஓவைசி கூறினார்.

Intro:Body:

Asaduddin Owaisi, AIMIM on 'Jai Sri Ram' & 'Vande Mataram' slogans being raised in Lok Sabha while he was taking oath as MP: It is good that they remember such things when they see me, I hope they will also remember the constitution and deaths of children in Muzaffarpur.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.