டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:-
உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை.
இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது.
எனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகை இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வளர்ச்சி அரசியலை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தின் உண்மையான நகலாக உள்ளார்.
இவ்வாறு பிப்லாப் குமார் தேப் கூறினார்.
கம்யூனிசத்தின் உண்மையான நகல் கெஜ்ரிவால்: பாஜக முதலமைச்சர் இவர் தவிர அஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பீமா கண்டு மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோரும் டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது, “டெல்லியில் பாஜக அரசு அமைக்கும்” என அஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். டெல்லியில் 2.5 லட்சம் வடகிழக்கு மாநில மக்கள் உள்ளனர்.அவர்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பரப்புரையில் வடகிழக்கு மாநில தலைவர்களை பாஜக களமிறக்கியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடந்து, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: பாஜக அவசர ஆலோசனை