இது குறித்து அருணாச்சல பிரதேசத்தின் வேளாண்மை, தோட்டக்கலை செயலாளர் பிடோல் தயெங், அனைத்து மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஊரடங்கு உத்தரவால் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களிலிருந்து வரும் காய்கறிகள் பெரும்பாலான மாவட்ட சந்தைகளில் வந்தடைகிறது. இருப்பினும், தலைநகர் இட்டாநகரில் காய்கறிகளின் தட்டுப்பாடு கடுமையாகவுள்ளது. இந்தச் சூழ்நிலையை சரிசெய்ய தங்கள் மாவட்டங்களில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழுவின் தலைவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அவர்கள் தங்களது மாவட்டத்தில் தேவைக்கு அதிகம் இருக்கும் காய்கறிகளை கண்டறிந்து, காய்கறி பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். ஒருவேளை தங்களது மாவட்டத்தில் கூடுதல் காய்கறிகள் இருந்தால் சில விதிமுறைகளை பின்பற்ற இட்டா நகருக்கு அனுப்பி வைக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பண்டர்டேவா, பாபம் பரே ஆகிய பகுதிகளில் கூடுதலாக சுமார் 100 மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் - பொதுமக்கள் வரவேற்பு