மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷன் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷன் 16 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 12 பேர் இறந்தவர்களாவர்.
அவர்களின் விவரம் பின்வருமாறு,
பத்ம விபூஷன்
- சுஷ்மா சுவராஜ் - பொது வாழ்க்கை
- மனோகர் பாரிக்கர் - பொது வாழ்க்கை
- அருண் ஜேட்லி - பொது வாழ்க்கை
- ஜார்ஜ் பெர்னாண்டஸ் - பொது வாழ்க்கை
- விஷ்வேஷ் தீர்த்த சுவாமிஜி - ஆன்மிகம்
பத்ம பூஷன் விருது
- சையது முவாசம் அலி - பொது வாழ்க்கை
- நீலகண்ட ராமகிருஷ்ண மாதவ மேனன் - பொது வாழ்க்கை
பத்மஸ்ரீ விருது
- இந்திரா தசநாயகே - இலக்கியம் மற்றும் கல்வி
- அப்துல் ஜாபர் - சமூக சேவை
- மன்மோகன் மகாபத்ரா - கலை
- தேட்சு நாக்கமுரா - சமூக சேவை
- வசிஷ்த நாராயண சிங் - அறிவியல் துறை