மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஜனவரி 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். அவர் அமெரிக்கா சென்றவுடன் நிதித்துறை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்தியா திரும்பிய அருண் ஜெட்லி, "தாயகம் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.