மத்திய அரசு வெளியிட்ட "ஆரோக்ய சேது" செயலி மூலம் கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். . தற்போது, இந்தச் செயலியை பல கோடி இந்தியர்கள் தங்களது செல்ஃபோனில் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்களின் செல்ஃபோனில் ஆரோக்ய சேது செயலி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதேபோல், அரசு, தனியார் ஊழியர்களின் செல்ஃபோன்களில் கண்டிப்பாக ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். ஊழியர்கள் செயலியை தரவிறக்கம் செய்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தவது நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் சாலைகளில் சுதந்திரமாக நடமாடும் வனவிலங்குகள்!