ETV Bharat / bharat

மோடி பார்வையிட்ட மருத்துவமனை: ராணுவம் விளக்கம்

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய லே-வில் உள்ள ராணுவ மருத்துவமனையின் மருத்துவ வசதி குறித்து இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 5, 2020, 5:10 AM IST

மோடி பார்வையிட்ட மருத்துவமனை
மோடி பார்வையிட்ட மருத்துவமனை

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை லடாக்கிற்கு அறிவிக்கப்படாத விஜயம் மேற்கொண்டார்.

பிராந்தியத்தின் பல பகுதிகளில் சீனாவுடனான எல்லையைக் கையாள்வதில் இந்தியாவின் உறுதியை காட்டுவதாகக் கூறினார்.
அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார், மேலும் அவர்களின் துணிச்சல் வரவிருக்கும் நேரங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர்களிடம் கூறினார்.

காயமடைந்த வீரர்களுடன் மோடி உரையாடிய புகைப்படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ உபகரணங்கள் இல்லாத மருத்துவமனையில் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் தவறான தகவல்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன.

இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடி காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

கரோனா நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளைத் தனிமைப்படுத்தும் வசதிகளுடையதாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவான பயிற்சி ஆடியோ,வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட அரங்கம், ஒரு வார்டாக மாற்றப்பட்டது.

கல்வானில் இருந்து வந்த காயமடைந்த வீரர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமை இராணுவத் தளபதி ஜெனரல் எம். எம். நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் அதே இடத்தில் காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.