ETV Bharat / bharat

இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ? - விமானங்கள் சுட்டுவீழ்த்தும் ஆயுதம்

டெல்லி : ரூ. 39 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தளவாட தொழிற்சாலை வாரியம், ராணுவத்துக்கு விநியோகம் செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anti aircraft ammuniation plane CAG report

author img

By

Published : Feb 12, 2020, 2:05 PM IST

இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் :

ஒடிசா மாநிலம் கொபால்பூரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போர் விமானங்களைத் தாக்க பயன்படுத்தப்படும் 'கே' ரக ஆயுதத்தை ராணுவம் சோதனையிட்டது. இந்த சோதனையின்போது விபத்து நேர்ந்ததால்,'கே' தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறு தளவாட தொழிற்சாலை வாரியத்திடம் (Ordinance Factory Board - OFB) ராணுவம் தெரிவித்தது. இதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட ஆயுதம் தடை செய்யப்பட்டது.

பின்னர், சில மாற்றங்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 'கே' ரக ஆயுதங்களை ராணுவ தலைமையகம் ஏற்றுக்கொண்டதால், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த ஆயுதத்தின் மீதான தடை விலக்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் 2014 முதல் செப்டம்பர் 2015 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட 'கே' ரக ஆயுதங்களை விநியோகிக்க வேண்டாம் என OFB-யிடம் ராணுவம் கேட்டுக்கொண்டது.

எனினும், தடை காலம் அமலின் இருந்தபோது 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 53 ஆயிரத்து 369 'கே' ரக ஆயுதங்களை மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்கோன் மத்திய ஆயுத கிடக்குக்கு OFB விநியோகித்துள்ளது.

அந்த ஆயுதங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் அல்லது இறுதி கட்டத்தில் இருந்ததாலேயே ராணுவத்துக்கு விநியோகிக்கப்பட்டதாக OFB விளக்கமளிக்கமாகும்.

தடை காலத்தில் ராணுவதுக்கு வழங்கப்பட்ட 'கே' ரக ஆயுதங்களை ராணுவ தலைமையகம் பிரிசீலனை செய்து வருகிறது.

தடை காலம் அமலில் இருந்தபோது ராணுவத்துக்கு 'கே' ரக ஆயுதங்களை OFB விநியோகம் செய்திருந்திருக்கக் கூடாது. அதேபோல, புல்கோன் மத்திய ஆயுத கிடக்கு அதனை வாங்கியிருக்கக்கூடாது அப்படியே வாங்கிருந்தாலும் அவற்றை தனிமைப்படுத்தி, ராணுவ பயன்பாட்டிற்கு கொடுத்திருக்கக் கூடாது. இதுவே சிஏஜியின் நிலைபாடாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டெல்லி தேர்தலில் 0.5 சதவீதம் வாக்குகள் பெற்ற நோட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.