அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சங்லங் மாவட்டத்தின் மியாவ் பம் வனப்பகுதியில் இந்திய ராணுவத்துடன் இணைந்து அம்மாநில காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இது குறித்து பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் பி. காங்சோய் பேசுகையில், ''புதன்கிழமை இந்திய ராணுவமும், அருணாச்சலப் பிரதேச காவலர்களும் இணைந்து வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது ஏகே-56 ரக மூன்று துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஒரு பீப்பாய் வெடிமருந்து துகள்கள், கையெறி குண்டுகள், 22 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன'' என்றார்.
இந்த ஆயுதங்கள் யாருக்குச் சொந்தமானது என்பது பற்றி மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக செய்தித் தொடர்பாளருக்கு கரோனா?