ETV Bharat / bharat

பாஜக தனது அரசாங்கத்தை கலைக்க முயற்சி - ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு! - பஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனிபா

ஜெய்ப்பூர்: பாஜக தனது அரசாங்கத்தை கலைக்க முயற்சிப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை எதிர்த்து பாஜகவினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Rajasthan government
Rajasthan government
author img

By

Published : Jul 12, 2020, 2:38 PM IST

பாஜக தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (ஜூலை 11) குற்றம்சாட்டியுள்ளார். ஆடுகளைச் சந்தையில் வாங்குவதைவிட இவர்கள் எம்எல்ஏ-க்களை வாங்க முயற்சிக்கிறார்கள் எனவும் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், 'முதலமைச்சர் குதிரை, யானை வர்த்தகம் செய்ததற்குப் பிறகு தற்போது ஆடு வர்த்தகத்தில் இறங்கியுள்ளார். இவர் கூறிய குற்றச்சாட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களையும் அவமானப்படுத்தி உள்ளது. அவர் தனது கட்சியின் எம்எல்ஏ-க்களை கூட நம்பவில்லை' என இவ்வாறு கூறினார்.

பின்னர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறுகையில், 'பாஜக ஒரு சதித்திட்டத்தை தீட்டுகிறது. ராஜஸ்தானில் பாஜகவினரின் திட்டம் இங்கே செயல்படாது என்பதை உணர வேண்டும். எங்களுக்கு என்ன பலம் உள்ளது என்பதை மாநிலங்களவை தேர்தலின் போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இது மத்தியப்பிரதேசம் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். பாஜக-வில் சில பேர் இங்கே வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால் இவர்கள் இங்கே ஆட்சியை கலைக்க முற்படுகிறார்கள்' எனக் கூறினார்.

இதுகுறித்து ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் கூறுகையில், ’முதலமைச்சர் அசோக் கெலாட் ஒரு மிகப்பெரிய அரசியல் தந்திரவாதி. அவர் ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பாஜகவை காரணம் காட்ட விரும்புகிறார். கெலாட்டின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும். எம்எல்ஏ-க்களை துரோகிகள் எனக் குறிப்பிடுவதை, நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் எம்எல்ஏ-க்களை தன்வயப் பயன்படுத்துவதற்காக முதலமைச்சர் வதந்திகளை பரப்பி வருகிறார். இதன் மூலம் அவர் தனது எம்எல்ஏ-க்களை நம்ப வில்லை என்பதுதான் உண்மை' எனக் கூறினார்.

மாநில அரசை கலைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் அசோக் சிங், பாரத் மலானி ஆகிய இருவரை சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) நேற்று (ஜூலை 11) கைது செய்துள்ளது. மேலும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்' என ராஜஸ்தான் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் ரத்தோர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் உட்பட 107 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 13 சுயேச்சை எம்எல்ஏ-க்களில் 12 பேரின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.