ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவிற்கு தோல்வியைத் தந்துள்ளனர். அதுபோல டெல்லியிலும் பாஜக தோல்வியைத் தழுவும்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தற்போது டெல்லி மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களுடையப் பணிகளை மதித்து டெல்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு அதிகப்படியான வாக்குகளைச் செலுத்தி வெற்றி பெற வைப்பார்கள் " என்றார்.
டெல்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திரசேகர் ராவுடன், அசாதுதீன் ஓவைசி திடீர் சந்திப்பு