அமெரிக்காவிடமிருந்து 22ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, முதல் கட்டமாக சில ஹெலிகாப்டர்கள் ஜூலையில் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து எட்டு எண்ணிக்கையிலான உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள ஏஎச்- 64இ என்ற அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் பஞ்சாப் மாநிலம், பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.
அதனைத்தொடர்ந்து, இன்று விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் இணைத்து அறிமுகப்படுத்தினார். அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் அதி நவீன, தாக்குதல் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.