ETV Bharat / bharat

ஆந்திராவில் கர்ப்பிணிகள், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக 2 சத்துணவுத் திட்டங்கள் அறிமுகம்! - ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா

அமராவதி: ஆந்திராவில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு புதிய சத்துணவுத் திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஆந்திராவின் எம்.ஜி.ஆராகும் ஜெகன் - இரண்டு சிறப்பு சத்துணவு திட்டங்கள் அறிமுகம்!

author img

By

Published : Sep 8, 2020, 4:30 PM IST

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், "ஆந்திரப் பிரதேசம் 55 ஆயிரத்து 607 அங்கன்வாடி மையங்களில் இணைக்கப்பட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மாதம்தோறும் அரசின் அத்தியாவசிய ரேஷன் பொருள்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா, ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா ப்ளஸ் ஆகிய இரு சத்துணவுத் சிறப்புத் திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு திட்டங்கள் மூலம் 30 லட்சம் பெண்கள், குழந்தைகள் பயனடைவர். ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா திட்டமானது, மாநிலம் முழுவதும் 47,287 அங்கன்வாடி மையங்கள் மூலம் சத்தான உணவை விநியோகிக்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 5.8 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு மாதத்திற்கு 25 நாட்களுக்கு சூடான பால், அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் டேக்-ஹோம் ஊட்டச்சத்து கிட் தலா 250 கிராம் வேர்க்கடலை வெண்ணெய், வெல்லம் மற்றும் உலர்ந்த பேரீச்சைப் பழங்கள், ஒரு கிலோ சஜ்ஜா மாவு ஆகியவை வழங்கப்படும். இதற்காக 5.80 லட்சம் பயனாளிகளுக்கு மாதம்தோறும் தலா 850 ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 592 கோடியை அரசு செலவிட உள்ளது.

ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா பிளஸ் திட்டமானது, ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. எட்டு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவன மையங்கள் (ஐ.டி.டி.ஏ), 52 ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையங்கள் (ஐ.சி.டி.எஸ்) இணைந்து 77 பழங்குடி மண்டலங்களில் உள்ள 8,320 அங்கன்வாடி மையங்கள் மூலம் 3.8 லட்சம் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தைச் சென்றடைய வைக்கவுள்ளது.

சூடானப் பால், அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை என சிறப்பு உணவுத் தொகுப்பை கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு ஒய்.எஸ்.ஆர் சம்பூர்ணா போஷனா பிளஸ் திட்டம் வழங்கவுள்ளது. இரண்டு கிலோ பல தானிய ஓட்மீல், அரை கிலோ தலா வேர்க்கடலை, வெண்ணெய், சத்து மாவு, வெல்லம் ஆகியவற்றைக் கொண்ட டேக்-ஹோம் ஊட்டச்சத்து சிறப்பு உணவையும் வழங்க உள்ளது.

இதற்காக, 66 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதம் ஒன்றிற்கு தலா ரூ. 1,100 வீதம் மொத்தம் ரூ. 87.12 கோடியை அரசு செலவிட உள்ளது. மூன்று வயது முதல் 5 வயது வரையிலான ஏழு லட்சம் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், செலரி, 200 மில்லி பால், முட்டை, 50 கிராம் பாலம்ரிதம் லட்டு. இதேபோல், 36 முதல் 72 மாதங்களுக்கு இடைப்பட்ட ஏழு லட்சம் குழந்தைகளுக்கு மாதத்திற்கு 25 நாட்களுக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பால், முட்டை மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.

மாதம்தோறும் வழங்க தலா ஒரு குழந்தைக்கு ரூ.350 வீதம் மொத்தமாக ரூ. 296 கோடி செலவிடப்பட உள்ளது. அதேபோல, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான 13.5 லட்சம் குழந்தைகளுக்கு 2.5 கிலோ குழந்தை சூத்திரம், 25 முட்டை, 2.5 லிட்டர் பால் அடங்கிய டேக்-ஹோம் ஊட்டச்சத்து கிட் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு ரூ. 412 வீதம் மொத்தமாக 612 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 53 விழுக்காடு தாய்மார்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 விழுக்காடு குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும், 31 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் இருப்பதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளதை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.