ஆந்திராவில் கரோனா அச்சம் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமார், ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனை ராஜ்பவனில் சந்தித்து விளக்கினார்.
இதற்கிடையில் தேர்தலை ஒத்திவைக்க கூடாது, மாறாக ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை மிரட்டுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்திலும் ஒரு தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளது. இந்த வழக்கு நேற்று (மார்ச் 16) விசாரணைக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. ஆந்திராவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்கு மண்டல் பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளுக்கான தேர்தல்கள் முதலில் மார்ச் 21ஆம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டது.
நகராட்சி தேர்தல் மார்ச் 23ஆம் தேதியிலும், கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் மார்ச் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆதாரமற்ற ஆதாரங்களை வெளியிட்டதற்காக மாநில தேர்தல் ஆணையரிடம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் ஸ்டாலின் போட்டாவுக்கு பூஜை; திமுக தொண்டரின் ‘வெறி’ச்செயல்