உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் நடிகர் அனுபம் கேர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காஷ்மீர் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலலித்த அனுபம் கேர், "இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் காஷ்மீரில் எப்போது குடிபெயர்கிறார்களோ அப்போதுதான் காஷ்மீர் பிரச்னை தீரும்" என்றார்.
370ஆவது சட்டப்பிரிவு என்பது காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தாகும். இந்த சட்டப்படி காஷ்மீர் மக்களை தவிர அங்குள்ள நிலங்களை யாரும் வாங்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் 370வது சட்டப் பிரிவை நீக்க முயற்சி எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட அனுபம் கேர் காஷ்மீர் பிரச்னை குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்தார். மேலும் இவர் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.