சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள கன்தாகார் பகுதியில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது.
மழையையும்ம் பொருட்படுத்தாது நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஃபரிதா என்ற 50 வயது பெண் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.
பின்னர், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்ததார்.
இதுகுறித்து ரியாத் மன்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ராவித் யாதவ், "மழையில் நனைந்த ஃபரிதாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தினரின் ஆலோசனையையும் கேட்காமல் அவர் போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதுபோன்ற காரணத்தால், தயாபா என்ற 20 வயது பெண் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த இரு பெண்களும் பழைய லக்னோ பகுதியைச் சேர்ந்தவர்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக லக்னோ கன்தாகார் பகுதியில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. ஆனால், போராட்ட இடத்தில் பந்தல் போடக்கூட காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா
?