பொதுவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்படும். இதனால் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாதவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.
அதிலும் குறிப்பாக காசி போன்ற பிரபல சுற்றுலா தளங்களில் உள்ள ரயில் நிலையங்களில் மொழி தெரியாததால், பல சுற்றுலா பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் இந்த பிரச்னையை போக்க, ரயில்வே துறை புதியதொரு முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தற்போது வாரணாசி ரயில் நிலையத்தில் இந்தி ஆங்கிலத்துடன் தெலுங்கிலும் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. உத்தர பிரதேசத்திலுள்ள இந்துக்களின் புனித தளமாக கருதப்படும் காசிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
இதன் காரணமாக விரைவில் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரயில்வே அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 359 மாணவர்கள்