ETV Bharat / bharat

'சும்மா சும்மா வராங்க' கோவிட்-19 பரிசோதனையிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த ஆந்திர இளைஞர்! - andhra news

அமராவதி: வீட்டிற்கு தினமும் கோவிட்-19 பரிசோதனை செய்ய அலுவலர்கள் வருகின்ற அச்சத்தால் வீட்டிலிருந்து தப்பியோடிய இளைஞரை மருத்துவ குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமராவதி
அமராவதி
author img

By

Published : Mar 18, 2020, 3:05 PM IST

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பதேரு (Paderu) பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிங்கப்பூரிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 14 நாள்கள் கண்காணிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி மருத்துவ குழுவினர் தினந்தோறும் அவர் வீட்டிற்கு வந்து அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளனர். இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளைஞர், திடீரென்று தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

அதன்பின், வீட்டிற்குவந்த மருத்துவ குழுவினருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், 'நீங்கள் எங்க வீட்டிற்கு வருவதை உள்ளூர் மக்கள் பார்த்தால் எங்களை தவறாக நினைப்பார்கள், அவர்கள் எங்களை அப்படி பார்த்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' என்று அவர்களை மிரட்டியுள்ளனர்.

இந்தத் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த கூடுதல் மருத்துவ அலுவலர் லீலா பிரசாத், "பெற்றோரிடம் இளைஞரை உடனடியாக வீட்டிற்கு வரச் சொல்லுங்கள்" எனக் கூறினார்.

வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த ஆந்திரா இளைஞர்

மேலும், அவர் இளைஞரின் பெற்றோரை சமாதானப் படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டார். வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களின் உடல்நிலைய கண்டிப்பாக 14 நாள்கள் கண்காணிக்க வேண்டும். இதில் யாருக்கும் விலக்கு கிடையாது எனப் பொறுமையாக நாட்டின் தற்போதைய நிலைமையை விவரித்தார். இருப்பினும் அந்த இளைஞரின் பெற்றோர் தங்கள் மகனின் இருப்பிடத்தை கூறுவதற்கு முன்வராதது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதனால், மிகவும் கோபமடைந்த கூடுதல் மருத்துவ அலுவலர், அந்த வீட்டின் மின்சார வசதியை துண்டிக்க பரிந்துரைத்து உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் மகனின் இருப்பிடத்தை கூறாவிட்டால் அனைத்துவிதமான அரசு ஆவணங்களும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கரேனா குறித்து தவறான தகவல் பரப்பியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.