இந்த பணியை மேற்கொள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை அரசு நியமித்திருக்கிறது. சராசரியாக ஒரு தன்னார்வலர் 50 வீடுகளை ஆய்வு செய்யும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட 1 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரத்து 654 வீடுகளில் இதுவரை 1கோடியே 38 லட்சத்து 58 ஆயிரத்து 747 வீடுகள் இந்த தன்னார்வ வலையமைப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து ஆந்திரா திரும்பிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் இந்த பரப்புரை அரசாங்கத்திற்கு உதவியுள்ளது.
இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்தவர்கள் இந்த பரப்புரையால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10,000 பேரில் 140 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுநோயின் அறிகுறிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை முழுமையாகக் கண்காணிப்பதற்கான பணி முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்களில் பிப்ரவரி 10, 2020 தேதிக்கு பின்னர் நாடு திரும்பிய கால அளவுகோளில் கணக்கெடுக்க அரசு நிர்ணயித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களைக் கண்காணிப்பதைத் தவிர, வீட்டின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வைரஸ் தொடர்பிலான 'செய்ய வேண்டியது & செய்யக் கூடாதது’ குறித்த விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருகிறது இந்த தன்னார்வலர்கள் வலையமைப்பு. இந்த விழிப்புணர்வை முன்னெடுப்பதின் மூலம் மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய அரசாங்கம் இலக்கு வைத்து இயங்குகிறது.
சமூகப் பரவல் அதிகரித்து வரும் வேளையில், இப்போது அரசாங்கம் இந்த பரப்புரையை மேலும், விரிவுபடுத்தியுள்ளது. கடந்த காலத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்களிடமும் கவனம் செலுத்துகிறது. இந்த பரப்புரையின் காரணமாக, இந்திய அரசின் பதிவுகளில் விவரங்கள் குறிப்பிடப்படாத நபர்களையும், தங்களின் பயண வரலாற்றை வேண்டுமென்றே மறைப்பவர்களையும் அரசாங்கத்தால் இதன் மூலம் அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறது.
ஒவ்வொரு தன்னார்வலரும் தலா 50 வீடுகளுக்கு பொறுப்பு ஏற்பார். இந்த 50 வீடுகளில் ஏதேனும் தொற்றுநோய் அறிகுறி கொண்ட நபர்களோ அல்லது வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களோ இருந்தால், தன்னார்வலர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசி செயலியில் ஒரு பதிவை செய்கிறார்.
இந்த உள்ளீடுகள் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் நேரடியாகச் சென்று கண்காணிப்பு பணி தொடங்குகின்றன. குறிப்பிட்ட நபரின் தேவையைப் பொறுத்து, சுகாதார குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகுந்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.
இந்திய அளவில் ஒரு முன்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜெகன் மோகன் ரெட்டி அரசு முன்னெடுத்து வருகிறது.
இதையும் படிங்க : கரோனாவோடு ஒப்பிட்டு வடகிழக்கு மக்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை - உள் துறை அமைச்சகம்