ETV Bharat / bharat

படகு கவிழ்ந்து 12 பேர் மரணம், 30 பேர் மாயம்! - ஆந்திராவில் சோகம்

அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 30 பேரை மீட்புப் படையினர் தேடிவருகின்றனர்.

godavari river
author img

By

Published : Sep 16, 2019, 5:56 PM IST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று 60 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஏற்கனவே ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 30-க்கும் மேற்பட்டோரை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இந்த மீட்புப் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆற்றில் மாயமானவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமாகவும் படகு மூலமாகவும் மாயமானோரை தேடிவருவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் மாயம்!

இதனிடையே, படகு விபத்துக்குள்ளான பகுதியை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.