பாகிஸ்தான் உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கவுசாம்பி மாவட்டத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். விசாரணையின்போது இவரின் பெயர் இன்தாஜார் சையத் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியப் பாதுகாப்புப் படை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-க்கு இவர் விஜயவாடாவில் உள்ளபோது தெரிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதையடுத்து, ஆந்திர காவல் துறையினர் இவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதையடுத்து இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ளார் எனக் காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது.
பின்னர், உத்தரப் பிரதேசத்திற்கு விரைந்த ஆந்திர காவல் துறையினர் இன்தாஜார் சையத்தை கைது செய்தனர். காவல் துறையினர் இவரைத் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: உன்னாவ் பாலியல் வழக்கு: நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை!