ETV Bharat / bharat

ஆந்திராவில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - செப்டம்பர் 5ஆம் தேதி

ஆந்திராவில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அடிமுலப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Andhra Pradesh Covid 19 YS Jagan Andhra schools Andhra schools reopen from Sept 5 Education Minister Adimulapu Suresh ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு செப்டம்பர் 5ஆம் தேதி அடிமுலப்பு சுரேஷ்

author img

By

Published : Jul 22, 2020, 6:15 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் அடிமுலப்பு சுரேஷ் இன்று (ஜூலை22) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் கல்விக் கூடங்கள் திறக்கப்படும் என்றார். எனினும் அப்போதைய நிலைமை கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவெடுத்துள்ளோம். அப்போது, மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படாது. அதற்கு பதிலாக மாணவர்களின் உணவுக்கான அரிசி, பயனாளர்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்படும்.

அடுத்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும். ஜூனியர் அரசு கல்லூரிகளில் ஜேஇஇ, ஐஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ஆந்திராவின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவியும் அமைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்பை முறையாக செயல்படுத்த இரண்டு மாநில அளவிலான இயக்குநர் பதவிகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மண்டலத்திலும் அரசு ஜூனியர் கல்லூரி அமைக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ஜெகன் மோகன் அரசில் இணைந்த இரண்டு புதிய அமைச்சர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.