ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 11ஆவது நினைவு தினமான இன்று (செப் 2) கடப்பா மாவட்டம், இடுபுலபாயாவில் உள்ள அவரது சமாதியில், அவரது தாயார் ஒய்.எஸ். விஜயலட்சுமி, மனைவி ஒய்.எஸ். பாரதி ஆகியோருடன் அஞ்சலி செலுத்தினார்.
இவர்களுடன் துணை முதலமைச்சர் அம்சாத் பாஷா, சட்டப்பேரவை உறுப்பினர்களான ரவீந்திரநாத் ரெட்டி, அமர்நாத் ரெட்டி, டி.டி.டி தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி எனப் பலர் கலந்து கொண்டனர். மேலும், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நினைவு தினத்தை அமராவதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி மாநில அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் அனுசரித்தனர்.
இக்கட்சியின் மூத்தத் தலைவர்கள், தற்போது உள்ள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்தினார்கள்.