ETV Bharat / bharat

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 2 கிலோ அரிசி: புதுமையான விழிப்புணர்வு!

ஹைதராபாத்: பிளாஸ்டிக் பைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசேர்க்க புதுமையான முயற்சியில் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் நகராட்சி அலுவலர்கள் இறங்கியுள்ளனர்.

author img

By

Published : Oct 27, 2019, 11:45 AM IST

plastic-reduction

பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்ட நகராட்சி அலுவலர்கள் புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை பொதுமக்கள் கொண்டுவந்து கொடுத்து அதற்கு பதிலாக இரண்டு கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் பகுதியில் இந்த புதுமையான பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் தலாரி ரங்கைய்யா, மாவட்ட ஆட்சியர் சத்திய நாராயணா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி அலுவலர்களிடம் கொடுத்துவிட்டு இரண்டு கிலோ அரிசியை பெற்றுச்சென்றனர்.

ஒரு கிலோ நெகிழி குப்பைக்கு இரண்டு கிலோ அரிசி

அரிசி தவிர மக்களுக்கு தேவையான பிற பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு மக்களவை உறுப்பினர் தலாரி ரங்கையா அறிவுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் இந்த முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் பையினால் உயிருக்குப் போராடிய குட்டி மீன்... வைரல் காணொலி!

Intro:Body:

GUNTHAKALLU, Ananthapuram district muncipality authorities intiated a programme for plastic ban for the first time.  LEAVE PLASTIC SAVE GUNTHA KALLU  a very innovative idea through which muncipality is asking the public to bring waste plastic and and take away 2 kgs of rice. MP talari rangayya, district collector started this programme. Quality rice will be given if waste plastic is collected and given to the municipality.  MP Talari Rangayya has advised officials to take steps to provide other necessities besides rice.  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.