ETV Bharat / state

இசை ஆசிரியை ஊதிய வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து! - music teacher salary case - MUSIC TEACHER SALARY CASE

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியத்தை திரும்ப கொடுக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 6:26 PM IST

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றியவர் ஹேமலதா. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் 2009 ஜூன் முதல், 2015ஆம் ஆண்டு மார்ச் வரை அதிக ஊதியம் வழங்கியதாகக் கூறி, 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை திரும்ப வசூலிப்பது என 2017ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை ஆசிரியர் ஹேமலதா செலுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு பின், 2020இல் தன்னிடம் தவறுதலாக ஊதியம் பிடிக்கப்பட்டதாக கூறி ஹேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்பக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, கடந்த 2017ஆம் ஆண்டே கூடுதல் ஊதியத் தொகையை திரும்பச் செலுத்திய மனுதாரர், மூன்று ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.