ETV Bharat / bharat

ஐசியூவில் வென்டிலேட்டர் இல்லையா... மருத்துவர்களைத் தாக்கிய நோயாளியின் உறவினர்கள் கைது! - உத்தரப்பிரதேசம்

லக்னோ: ஏஎம்யூ மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்னையிருந்த நபருக்கு சிகிச்சைக்காக வென்டிலேட்டர் இல்லை எனக் கூறிய மருத்துவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத
கத
author img

By

Published : Jul 21, 2020, 7:39 PM IST

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏஎம்யூ மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த மூன்று நாள்களாக மூச்சுத்திணறல், வறட்டு இருமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, திடீரென்று சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருடன் வந்த உறவினர்களிடம் மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதி இல்லாத காரணத்தினால், அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டியது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

ஒரு சிலர் அங்கிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. நோயாளியை மாற்றாமல் வாக்குவாதத்தில் உறவினர்கள் ஈடுபட்டு வந்ததால், அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். அதில், இரண்டு நபர்களுக்கு உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக ஜாமின் வழங்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.