பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் அமித் ஷா தனது ' ட்விட்டரில் அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது, அருண் ஜேட்லியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. நான் கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்லாமல் எனக்கு எப்போதும் வழிகாட்டும் ஒளியாக இருந்த ஒரு முக்கியமான குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.