இன்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானின் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு கருதியே அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீர் அலுவலர்களாலேயே எடுக்கப்பட்டது.
எப்போது நிலைமை சீரானதாக அவர்கள் கருதுகிறார்களோ அப்போது இந்த தடை விலக்கப்படும். போதிய அளவிலான மருந்துகளும் மக்களுக்குக் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போது மருத்துவ வாகன சேவையும் அங்குத் தொடங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டிசல், சமையல் எரிவாயு, அரிசி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போதிய அளவு இருக்கிறது. மேலும், வரும் காலங்களில் காஷ்மீரிலிருந்து 22 லட்சம் டன் ஆப்பிள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், வங்கிச் சேவைகள் என அனைத்தும் முழுவதமாக செயல்படுகிறது. அனைத்து உருது மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளும்கூட செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
மேலும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பின், இதுவரை ஒருவர்கூட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகவில்லை. நான் இப்போது கூறிய தகவல்கள் எல்லாம் தவறானவை என்று குலாம் நபி ஆசாத்தால் நிரூபிக்க முடியுமா? இது பற்றி இன்னும் ஒரு மணி நேரம்கூட விவாதிக்கத் தயாராகவே உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி மாசுக்குக் காரணம் அரவிந்த் கெஜ்ரிவால்தான் - பாஜக எம்பிகள் தாக்கு