குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மூக்கு தொடர்பான சிகிச்சைக்காக கேடி என்னும் தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிவுற்றதை அடுத்து, அவர் வீடு திரும்பினார்.
கடந்த ஜனவரி மாதம், பன்றிக் காய்ச்சலால் அமித் ஷாவுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.