மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 13 நாட்களாக போராடிவருகின்றனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியை சேர்ந்த 32 வயது விவசாயி அஜய் மூர் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். இவர், நேற்றிரவு (டிச.7) ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சாலை ஓரத்தில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை அவர் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி இவரது மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறது. வேளாண் சட்டத்தற்கு எதிராக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்நிகழ்வு அப்பகுதி விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்: ஆந்திர அரசு கோரிக்கை நிராகரிப்பு