உத்தரப் பிரதேச மாநிலம் அசம்காரில் டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அசம்கார் மாவட்டத்தில் மிர்சா அடம்புர், சிர்காந்த்புர், பர்மன்புர் ஆகிய கிராமங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு தலை பாகம் மட்டும் கீழே விழுந்திருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராமப் பகுதியில் சந்தேகிக்கும்படி எவரேனும் வந்தார்களா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், 20 வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைகள் தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது, குற்றவாளி யார் என்பதை காவல் துறை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.