சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி சட்டபேரவை எதிரில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார்.
![முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-cm-ambedkar-function-7205842_14042020105841_1404f_1586842121_744.jpg)
முன்னதாக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏவி சுப்பிரமணியம் ஆகியோர் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலரால் அலங்கரிக்கபட்ட அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து