மும்பை: முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு, மஹாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில், அரசு மதுபான விடுதிகளை திறக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சூழலில் அதன்மூலம் சிறிதளவேனும் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு மதுபானங்கள் மூலம் மாநிலத்திற்கு கிடைக்கப்பெறும் கலால் வரியானது தினசரி ரூ. 41.66 கோடியாகவும், துவே மாதத்திற்கு ரூ. 1,250 கோடியாகவும், ஆண்டொன்றுக்கு ரூ. 14,000 கோடி சராசரி அளவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மஹாராஷ்டிரா மாநிலம்தான் கோவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.