ETV Bharat / bharat

ஆந்திராவில் நிரம்பி வழியும் நீர் நிலைகள்! - பிரகாசம் பேரேஜ், ஸ்ரீசைலம், நாகார்ஜுனாசாகர் மற்றும் புலிசிந்தலா ஆகிய நான்கு நீர்த்தேக்கங்கள்

அமராவதி: கனமழையைத் தொடர்ந்து ஆந்திராவின் அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன.

ஆந்திராவில் நிரம்பி வழியும் நீர் நிலைகள்!

author img

By

Published : Oct 15, 2020, 10:45 AM IST

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள முக்கிய நீர் தேக்கங்கள் நிரம்பிவழிகின்றன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள 2.93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சர் ஆர்தர் காட்டன் பேரேஜ் அணையின் நீர்மட்டம் 44.65 அடியை தாண்டியுள்ளது. தற்போது இதில், 99.35 விழுக்காடு நீர் நிரம்பியுள்ளது.

கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடாவில் உள்ள பிரகாரம் தடுப்பணை தற்போது 56.2 அடி வரை நிரம்பியுள்ளது. 3.07 டி.எம்.சி. அளவுகொண்ட, பிரகாசம் தடுப்பணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததையடுத்து, தற்போது இந்த அணை முழுமையாக நிரம்பியுள்ளது.

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 885 அடியை எட்டியது, தற்போது நீர் சேமிப்பு நிலை 214.36 டி.எம்.சி.யாக உள்ளது. இதேபோல், 215.81 டி.எம்.சி. திறன்கொண்ட கர்னூல் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் தற்போது 99.98 விழுக்காடு வரை நிரம்பியுள்ளது. இதேபோல், நாகார்ஜுனாசாகர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 589.5 அடியில் உள்ளது, இது 312.05 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் திறன்கொண்டது.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் தற்போது 310.84 டி.எம்.சி. நீர் நிரம்பியுள்ளது, இது நீர்த்தேக்கத்தின் 99.62 விழுக்காடு தேக்கத்திறனை எட்டியுள்ளது.

மாநிலத்தில் அமைந்துள்ள ஆறு நீர்த்தேக்கங்களில், பிரகாசம் பேரேஜ், ஸ்ரீசைலம், நாகார்ஜுனாசாகர், புலிசிந்தலா ஆகிய நான்கு நீர்த்தேக்கங்கள் கிருஷ்ணா நதிப்படுகையின் கீழ் வருகின்றன

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.