ETV Bharat / bharat

இந்தியாவை நோக்கி கண்களைத் திருப்பும் உலக நாடுகள்! - பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்

பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தூண்ட இந்த ஆண்டுக்குள் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க, நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

All eyes on India as ASEAN attempts to conclude RCEP
author img

By

Published : Nov 4, 2019, 6:10 PM IST

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஆசிய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 16 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் சில கோரிக்கைகளையும் இந்தியா சார்பில் முன்வைத்தார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தென்சீன காலை நாளிதழ், 'பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிகாரிகள் திரைக்குப் பின்னால் செயல்படுகிறார்கள்' என்று குறிப்பிட்டிருந்தது. முன்னதாக மாநாட்டில், ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு இடையிலான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் முன்மொழியப்பட்டது.

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (RCEP) ஒப்பந்தத்தில் உள்ள 16 நாடுகள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும். மேலும் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மற்றும் டிரில்லியன் கணக்கான டாலர் வர்த்தகத்தை உள்ளடக்கியது.
இதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியாவிற்கும் ஆசியாவுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"இது எங்கள் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எங்கள் வர்த்தகமும் இன்னும் சீரானதாக இருக்கும். ஆசியா மற்றும் இந்தியா ஆகியவை கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களின் ஒருங்கிணைந்த சந்தையையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5.5 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகக் கொண்டுள்ளன' என்றார்.

அதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்தியாவுடன் அறிவிக்கப்படும், இந்த ஒப்பந்தத்தைக் காண ஆர்வமாக உள்ளன. இதுதொடர்பாக மாநாடு தொடக்க நாளில் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்தார். சில ஒப்பந்தங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி முதலீட்டை ஈர்ப்பது, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக நாடுகளும் தங்களின் பார்வையை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி - ஆங் சான் சூகி சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.