அலிகார்: உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்ததற்கு நேரெதிரான தகவலை அலிகார் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது. ஹத்ராஸில் கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என அலிகார் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார், அந்தப் பெண் வன்புணர்வு செய்யப்படவில்லை. கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே உயிரிழந்தார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அலிகார் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கை காவல் துறையினர் முகத்திரையை கிழித்துள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு